tips tips

விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்பாடு மெதுவாக உயர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அதில் அதிகம் பயன்படுத்தக்கூடிய சில ஷார்ட் கட் கீ தொகுப்புகளை இங்கு பார்க்கலாம்.
Win + Up Arrow மேக்ஸிமைஸ் செய்திட
Win + Down Arrow மினிமைஸ் செய்திட
Win + Left Arrow இடது ஓரத்திற்குத் திரையைக் கொண்டு செல்ல
Win + Right Arrow வலது ஓரத்திற்குத் திரையைக் கொண்டு செல்ல
Win + Home அனைத்து விண்டோக்களையும் மினிமைஸ் செய்யலாம்; மீண்டும் கொண்டு வரலாம்.
Win + T டாஸ்க் பார் என்ட்ரியைக் காட்ட;
மீண்டும் அழுத்த அனைத்து என்ட்ரிகளும் காட்டப்படும்.
Win + any number key (19) டாஸ்க்பாரில் பின் செய்யப்பட்ட புரோகிராம்கள், எண்ணுக்கேற்ப வரிசையில் உள்ளபடி தொடங்கப்படும்.
Win++ (கூட்டல் அடையாளம்) ஸூம் செய்திட
Win + - (கழித்தல் அடையாளம்) ஸூம் ஆனதை மீண்டும் குறைக்க
Win + Pause சிஸ்டம் கண்ட்ரோல் பேனல் ஆப்லெட் காட்டப்படும்.
Win + E விண்டோஸ் எக்ஸ்புளோரர் காட்டப்படும்.
Win + F பைல் அல்லது போல்டர்களைத் தேட சர்ச் விண்டோ திறக்கப்படும்.
Win + Ctrl + F நெட்வொர்க்கில் உள்ள கம்ப்யூட்டர்களைத் தேடி அறிய சர்ச் விண்டோ திறக்கப்படும்.

0 comments: