இணைய தளங்களில், இலவசமாகப் பைல்களைப் பதிந்து வைத்து எடுத்துப் பயன்படுத்த
மற்றும் பகிர்ந்து கொள்ள வசதி தரும் இணைய தளங்கள் இப்போது அதிக
எண்ணிக்கையில் இயங்குகின்றன. இவற்றில் ட்ராப் பாக்ஸ் (Drop Box) மிகப்
புகழ் பெற்றதாகும். அண்மையில் (நவம்பர் 13) இதில் பதிந்து இயங்கும் இதன்
வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை பத்து கோடியைத் தாண்டியுள்ளதாக, ட்ராப் பாக்ஸ்
நிறுவனம் அறிவித்துள்ளது.
இலவசமாக மட்டுமின்றி, கட்டணம் செலுத்தியும் கூடுதல் வசதியைப் பெறும் வாடிக்கையாளர்களையும் ட்ராப் பாக்ஸ் கொண்டுள்ளது. இந்த வகை வாடிக்கையாளர்கள், 200க்கும் மேற்பட்ட நாடுகளில் இருப்பதாக, ட்ராப் பாக்ஸ் அறிவித்துள்ளது. இணையத்தில் பதிந்து வைக்கப்படும் பைல்களில், தனி நபர் தகவல்கள் அடங்கிய பைல்கள் 7% இருப்பதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. வரும் 2016ல், இந்த எண்ணிக்கை 36% ஐ எட்டும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு பைல்களை இணைய தளங்களில் சேவ் செய்து வைப்பதற்குக் காரணம், மொபைல் சாதனங்களே. ஸ்மார்ட் போன் மற்றும் டேப்ளட் பிசிக்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு செல்கிறது. இவற்றில் உருவாக்கப்படும் பைல்களைப் பதிந்து வைத்திட ட்ராப் பாக்ஸ் போன்ற க்ளவுட் கம்ப்யூட்டிங் பிரிவில் இயங்கும் நிறுவன தளங்கள் உதவுகின்றன.
இத்தகைய வசதியைப் பயன்படுத்தும் வீடுகளின் எண்ணிக்கையைப் பார்க்கையில், ஒவ்வொரு வீடும் சராசரியாக 464 ஜிபி டேட்டாவினை சேவ் செய்து வைக்கின்றன. வரும் 2016 ஆம் ஆண்டில், இது 3.3. டெரா பைட்ஸ் ஆக உயர வாய்ப்புள்ளது. ட்ராப் பாக்ஸ் நிறுவனம் தன் இணைய தளத்தில், ட்ராப் பாக்ஸ் பயன்படுத்துபவர்கள் தங்களுக்கு இதில் ஏற்பட்ட அனுபவத்தினைப் பதிந்து பகிர்ந்து கொள்ளுமாறு https://www.dropbox.com/100m என்ற முகவரியில் உள்ள இணையப் பக்கத்தில் அழைப்பு விடுத்துள்ளது.

0 comments:
Post a Comment