மைக்ரோசாப்ட் + அடோப் பேட்ச் பைல்
மைக்ரோசாப்ட் மற்றும் அடோப் நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு செயல்படுவதால், இனி அடோப் பிளாஷ் பிளேயருக்க்கான, பிழை நீக்கும் தொகுப்பு கோப்புகள் (Batch Files) மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கும் பேட்ச் பைல்களுடனேயே கிடைக்கும். ஒவ்வொரு மாதத்திலும், இரண்டாவது செவ்வாய்க் கிழமை அன்று வெளியாகும் மைக்ரோசாப்ட் பேட்ச் பைல்களுடன் இணைந்தே இவை வெளியிடப்படும். இதனை அடோப் அண்மையில் தெரிவித்தது. அடோப் நிறுவனத்தின் பிளாஷ் பிளேயர், குரோம் பிரவுசருடன் இணைந்து வெளியிடப்பட்டு வருகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10 தொகுப்பில், அடோப் பிளாஷ் பிளேயரை இணைந்து பதித்து வழங்குகிறது. பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்துபவர்கள், தனியாகத்தான், அடோப் பிளாஷ் பிளேயரை இன்ஸ்டால் செய்து பயன்படுத்த வேண்டும்.
பூட் டிஸ்க் (Boot Disk):
கம்ப்யூட்டர் ஒன்றை இயக்கத் தேவையான சிஸ்டம் பைல்களைக் கொண்ட, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட, சிடி அல்லது டிவிடி. பொதுவாக, கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் தான், பூட் டிஸ்க்காக இருக்கும். இதில் பிரச்னை ஏற்படுகையில், சிஸ்டம் பைல்கள் கொண்ட பூட் டிஸ்க் மூலம் கம்ப்யூட்டரை இயக்குகிறோம்.
ரெசல்யூசன் (Resolution):
மானிட்டர் திரை அல்லது அச்சில் படம் ஒன்றில் எந்த அளவிற்கு டீடெய்ல்ஸ் உள்ளன என்பதைக் குறிக்க இந்த அலகு சொல்லைப் பயன்படுத்துகிறோம். ஒரு மானிட்டரில் இது அதன் பிக்ஸெல்களைக் குறிக்கிறது. எடுத்துக் காட்டாக 17 அங்குல மானிட்டரில் இது 1024 x 768 பிக்ஸெல் ஆக இருக்கும். அச்சுப் படிவம் மற்றும் ஸ்கேனரில் ரெசல்யூசன் என்பது ஒரு சதுர அங்குலத்தில் எத்தனை புள்ளிகளில் (Dots per inch) டீடெய்ல்ஸ் தரப்பட்டுள்ளது என்பதை இது குறிக்கிறது. அல்லது ஒரு சதுர அங்குல இடத்தில் எத்தனை துளி இங்க் அல்லது டோனர் தெளிக்கப்படுகிறது என்பதையும் ரெசல்யூசன் என்பதின் மூலம் சொல்கிறோம்.
Wizard என்பது கம்ப்யூட்டரில் உங்களை வழிகாட்டும் ஒரு பொதுவான வழிகாட்டி. இது அனைத்து புரோகிராம்களிலும் கிடைக்கும். வரிசையாக கேள்வி கேட்டு அல்லது ஆப்ஷன்ஸ் கொடுத்து அதில் உங்களுக்கான ஆப்ஷன்ஸ் தேர்ந்தெடுக்கச் சொல்லி வழி நடத்திச் செல்லும். சாதாரண விஸார்ட் என்றால் வேர்டில் ஒரு புதிய டாகுமெண்ட்டை திறக்கையில் உங்களிடம் கேள்வி கேட்டு ஆப்ஷன்ஸ் தரும் கட்டமும் ஒரு விஸார்ட் தான். சாப்ட்வேர் ஒன்றை இன்ஸ்டால் செய்கையில் உங்களை வழி நடத்துவதும் விஸார்ட் தான். ஒரு டேட்டா பேஸ் பைல் உருவாக்குகையில் கிடைப்பதும் விஸார்ட் தான்.
0 comments:
Post a Comment