கல்லும், மணலும் டயருக்கு மெத்தை! ஆடி கிவாட்‌ரோ டெக்னாலஜியால்!!

கிவாட்ரோ டெக்னாலஜி என்பது ஆடி வாகனங்களில் காணப்படும் போர் வீல் டிரைவ் தொழில்நுட்பமாகும். இந்த தொழில் நுட்பத்தினால் நான்கு சக்கரங்களுக்கும் தேவையான சக்தி செலுத்தப்படுவதால், எப்படிப்பட்ட சாலையையும் எளிதாய் கடக்கக் கூடிய ஆற்றலும், சாலையில் ஸ்திரத்தன்மையும் கிடைக்கிறது. 1980ஆம் ஆண்டு ஆடி கிவாட்ரோ டெக்னாலஜி முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டு மேலும் மேலும் மெரு கூட்டப்பட்டு, அதன் குறைபாடுகள் களையப்பட்டு, இன்று மிகவும் உபயோகமான எந்தவித சாலையிலும் எளிதாக பயணம் செய்யவும், ஓட்டுனர் ”லபமாக இயக்கி பயணத்தின் இனிமையை ரசிக்கவும் உறுதியாக இருக்கிறது. பள்ளம் மேடு உள்ள சாலைகளிலும், வழுக்கும் சேரும் சகதியும் உள்ள சாலைகளிலும், கற்கள் நிறைந்த மலைப்பாதைகளிலும், சரளைக் கற்கள் கொண்ட கிராமத்து சாலைகளிலும் எந்த கஷ்டமும் இன்றி இந்த தொழில்நுட்பத்தின் துணையுடன் எளிதாய் கடக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதற்குக் காரணம் என்ஜினின் 60சதவிகித சக்தியை பின் சக்கரத்திற்கும் 40 சதவிகித சக்தியை முன் சக்கரத்திற்கும் செலுத்துகிறது. இன்றைய ஆடி கார்களில் காணப்படும் மேம்படுத்தப்பட்ட கிவாட்ரோ டெக்னாலஜி. ஆடியின் கிவாட்ரோ டெக்னாலஜி மிக எளிமையான தொழில்நுட்பமென்றாலும் மிகவும் நம்பகமானதாகும். அதிக இழுக்கும் சக்தி, அதிக வேகம், ”லபமான ஸ்திரமான திருப்பும் விதிகள் மற்றும் சாலையில் ஸ்திரத்தன்மை இதில் கிடைக்கிறது. பொதுவாக கார்களில் என்ஜினிலிருந்து செல்லும் சக்தி பின்புற சக்கரங்களுக்கு சென்று அதற்கு தள்ளும் சக்தியை அளிக்கிறது. பின்புற சக்கரங்களின் தள்ளும் சக்தியினால் முன்புற சக்கரங்கள் உருள வண்டி நகர்வதே ரியர்வீல் டிரைவ் என்பது யாவரும் அறிந்ததே. போர் வீல் டிரைவ் என்பதில் என்ஜினின் சக்தியில் 60 சதவிகிதம், பின் சக்கரங்களுக்கு சென்று அதற்கு தள்ளும் சக்தியை தருவது போல், 40 சதவிகித சக்தியை முன்புற சக்கரங்களுக்கும் அளிக்கிறது. இதனால் நான்கு சக்கரங்களின் தள்ளும் சக்தியினால், வண்டி எவ்வளவு கரடுமுரடான சாலை என்றாலும், ”லபமாக ஓடிக் கடக்கும். இது பொதுவான போர் வீல் டெக்னாலஜி. இந்த போர் வீல் டெக்னாலஜியை தேவையான போது மட்டும் இதற்கான பிரத்‌யேகமான கியரைப் போட்டு மாற்றிக் கொள்வர். ஏனென்றால் எப்பொழுதும் போர் வீல் ட்ரைவில் இருந்தால் எரிபொருள் அதிகம் செல்வாகும். மேலும் அதிக வேகமும் ‌செல்ல முடியாது என்பதால். ஆனால் கிவாட்ரோ டெக்னாலஜியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு நிரந்தரமான போர் வீல் டிரைவ் கிடைக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. வண்டியின் வேகம் குறைவது எரிபொருள் வீணாவது போன்ற குறைகள் இதில் இல்லை. இதற்கு காரணம் இந்த போர்வீல் டிரைவ்வை கண்காணித்து கட்டுப்படுத்துவது இசிஎஸ் (ECS) என்ற எலக்ட்ரானிக் கண்ட்ரோல் சிஸ்டம் ஆகும்.
இதனால் வண்டியின் வேகம் போன்ற பல அம்சங்களை கணித்து அதற்கு ஏற்ப சக்கரங்களுக்கு தேவையான என்ஜின் சக்தியை தானாக அனுப்புகிறது. ஒரு ஆக்சிலின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டால் உடனடியாக கிட்டத்தட்ட 85 சதவீத சக்தி பின் சக்கரங்களுக்கும் கிட்டத்தட்ட 70 சதவீத சக்தி முன் சக்கரங்களுக்கும் மின்னல் வேகத்தில் அனுப்பப்படுகிறது. "டார்க் வெக்டரிங்' மூலம் ஒவ்வொரு சக்கரத்திற்கு தனித்தனியாக தள்ளும் சக்தி அனுப்பப்படுவதால் எம்மாதிரி சாலையிலும் வண்டி வழுக்கிச் செல்லும். சக்கரம் சூழல ஆரம்பிக்கும், முன்பாகவே பவரும், டார்க்கும் பகிர்ந்தளிக்கப்படுவதும், ஓட்டும் விதம் மற்றும் சாலையின் போக்கிற்கு ஏற்ப தானாகவே பவர் டிஸ்ட்ரிப்பூஷனை தீர்மானிக்கும் தொழில்நுட்பமும் குவார்ரோவின் சிறப்பம்சமாகும்.மேலும் இத்தொழில்நுட்பத்தில் செல்ப்-லாக்கிங் சென்டர் டிபரென்ஷியலின் எடையும் செயல்பாடும் மேலும் இதன் செயல்திறனை அதிகரிக்கிறது. சாலைகளில் திரும்பும் சமயமும், வேகம் கூட்டும் சமயங்களிலும் மிகச் சுலபமாக இருப்பதும் இத்தொழில்நுட்பத்தின் கூடுதல் சிறப்பாகும். என்ஜினின் எடை முன்புறம் உள்ளதால், முன் சக்கரங்களும் சேர்ந்து தள்ளும் போது வண்டியின் வேகமும் ஸ்திரத்தன்மையும் கூடுகிறது என்பதும் இத்தொழில்நுட்பத்தின் சிறப்பம்சமாகும். இந்திய சாலைகளுக்கேற்றது என்பது மட்டுமின்றி சாகச பயணங்களுக்கும் வரவேற்க வேண்டியது கிவாட்ரோ டெக்னாலஜி.

0 comments: