காரின் கம்ப்யூட்டர் இசியு
என்ஜினில் உள்ள இசியுவை எடுத்துக் கொண்டால் அது என்ஜினின் பல்வேறு செயல்பாடுகளை சென்சார்கள் மூலம் "டேட்டா'வாக பெற்றுக்கொள்கிறது. இசியுவில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர்கள் இந்த டேட்டாக்களை புராசஸ் செய்து அளிக்கிறது. அதன் மூலம் இக்னீஷன் டைமிங். பியூவல் இன்ஜெக்ஷன் போன்றவைகளை இசியு கண்காணிக்கிறது.இசியுக்கள் காரில் உள்ள பல அம்சங்களான கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம், பவர் டோர், ஏர்பேக், அட்ஜஸ்டபிள் சீட்கள், ரெயின் சென்சார் வைப்பர், அட்ஜஸ்டபிள் மிர்ரர், ஏபிஎஸ் பிரேக்கிங், சென்ட்ரல் லாக்கிங் என்று பலவற்றையும்
இயக்குகிறது. மொத்தத்தில் இன்றைய கார்களின் எல்லா நவீன சொகுசு அம்சங்களும் இயங்குவது இசியுவினால் தான் என்றால் மிகையல்ல.
0 comments:
Post a Comment