பி.எம்.டபிள்யூ., 6 சீரீஸ் கார் அறிமுகம் விலை ரூ.86.4 லட்சம்

இந்தியாவில், விலை அதிகமான சொகுசு கார் விற்பனையில் முதலிடத்தில் உள்ள பி.எம். டபிள்யூ., கார் நிறுவனம், சமீபத்தில், 6 சீரிஸ் 640டி என்ற புதிய காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரின் விலை ரூ.86.4 லட்சம். இதில், 3 லிட்டர் - இன்லைன் 6 டர்போ டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வசதி கொண்டது. அதிகபட்சமாக, மணிக்கு, 250 கி.மீ., வேகத்தில் செல்லும் திறன் படைத்தது. பூஜ்ஜியத்தில் இருந்து, 100 கி.மீ., வேகத்தை, 5.4 வினாடிகளில் தொட்டு விடும். இந்த கார், லிட்டருக்கு, 17.5 கி.மீ., மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார், மூன்று "டிரைவிங் மோட்' வசதியில் கிடைக்கும். எக்கோ-ப்ரோ மோட் வசதியில், அதிக மைலேஜ் கிடைக்கும். கம்பர்ட் பிளஸ் மோட் வசதியில், சொகுசாக பயணம் செய்யலாம். ஸ்போர்ட் மோட் வசதியில், கார் சீறி பாயும். இந்த காரில் ஒரே நேரத்தில், நான்கு பேர் பயணம் செய்யலாம்.

0 comments: