நட்பு நீடிக்க ...
உலகில்
எது இல்லாமல் வேண்டுமானாலும் ஒருவன் இருக்கலாம் ஆனால் நண்பர்கள் இல்லாமல்
யாரும் இருக்க முடியாது . நல்ல நண்பர்களை பெற்றவன் எப்பொழுதும்
மகிழ்ச்சியாகவே இருப்பான் காரணம் அவன் நண்பர்கள் அவன் கஷ்ட படுவதை
பார்த்துகொண்டு இருக்க மாட்டார்கள் . அப்படிபட்ட நட்பு நீண்ட நாள் நீடிக்க
என்ன செய்ய வேண்டும் என ஆராய்வதே இந்த பதிவு ...
- நண்பர்களிடம் சாதி மதம் பார்க்காதிர்கள் , எக்காரணம் கொண்டும் அவர்கள் சாதி மதத்தை அவர்கள் முன் கிண்டல் செய்தீர்கள் .
- நண்பர்களின் பிறந்த நாள் , திருமண நாள் போன்றவற்றிற்கு முடிந்தவரை நேர்ல லாது தொலைபேசியில் வாழ்த்து சொல்லுங்கள் . இல்லாவிட்டால் ஒரு SMS அனுப்புங்கள் .
- நல்ல காரியங்களுக்கு செல்கிறோமோ இல்லையோ நண்பர்களின் வீடுகளில் நடக்கும் துக்க காரியங்களுக்கு செல்லுங்கள் . அப்பொழுதுதான் சோகத்திலும் நண்பன் கூட இருக்கிறான் என்ற ஆறுதல் இருக்கும்
- நண்பர்களின் உடலை அல்லது அவர்களின் பழக்க வழக்கங்களை போது இடத்தில் கிண்டல் செய்யாதிர்கள் (முக்கியமாக பெண்கள் இருக்கும் போது )
- விசேஷ நாட்களில் அவர்கள் வீட்டிற்கும் , அவர்களை உங்கள் வீட்டிற்கும் அழையுங்கள் .
- கூடுமான வரை நண்பர்களிடம் கடன் வாங்காதீர்கள் , பல நட்புகள் பிரிய கடந்தான் முக்கிய காரணம் .
- நண்பர்களின் தவறுகளை எடுத்து கூறுங்கள் ஆனால் எப்பொழுதும் குறை சொல்லிக்கொண்டே இருக்காதீர்கள் .
- நண்பர்கள் பேசுவதை கவனியுங்கள் நாம் பேசுவதை அவர்கள் கவனிக்க வேண்டும் என நாம் ஆசை படுவதை போல அவர்களும் ஆசை படுவார்கள் அல்லவா ?
- நண்பர்களிடம் பொய் சொல்லாதீர்கள் அது பின்பு உங்களுக்கே பிரச்சனையாக வரலாம் .
- பெண்கள் தங்கள் தோழிகளிடம் நகைகள் கடன் வாங்காதீர்கள் .
இவை கொஞ்சம் தான் இன்னும் இன்னும் பல விஷயங்கள் உள்ளது .பதிவின் நீளம் கருதி எழுதவில்லை . உங்களுக்கு தோன்றும் கருத்தை சொல்லுங்கள் .
0 comments:
Post a Comment