காவிரி நதிநீர்ப்பிரச்சினை அன்று முதல் இன்று வரை...
சிவில் சர்வீஸ் தேர்வில் சாதனை படைக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் ‘புதிய தலைமுறை கல்வி’ வழங்கும் பகுதி இது.
காவிரி நதிநீர்ப் பிரச்சினை பல ஆண்டுகளாகத் தொடர்ந்த பேச்சுவார்தைகளுக்குப் பிறகும் நீதிமன்ற உத்தரவுகளுக்குப் பிறகும் பிரச்சினை தீராமல் தொடர்கதையாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இரு நூற்றாண்டுகளாக இருந்து வரும் காவிரி நதிநீர்ப் பிரச்சினை அன்று முதல் இன்று வரை...
ஆங்கிலேயர் காலத்தில் துவங்கிய பிரச்சினை
ஆங்கிலேயர் ஆட்சி காலமான 1870-ல் மைசூர் அரசுக்கும் சென்னை மாகாண அரசுக்கும் இடையே காவிரி நீரைப் பகிர்ந்துகொள்வதில் சிக்கல் எழுந்தது. மைசூர் அரசு, பிரிட்டிஷ் - இந்திய அரசிடம் முறையிட்டதன் பேரில் பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு 1892-ல் முதன்முதலாக ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆறு விதிகளைக் கொண்டிருந்த அந்த ஒப்பந்தத்தின்படி மைசூர் அரசு காவிரியில் புதிதாக அணை ஒன்றைக் கட்ட விரும்பினால் அது குறித்த முழு விவரங்களையும் சென்னை மாகாணத்துக்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும் என்பது அதன் முக்கிய விதியாகும்.
காவிரி நதிநீர்ப் பிரச்சினை பல ஆண்டுகளாகத் தொடர்ந்த பேச்சுவார்தைகளுக்குப் பிறகும் நீதிமன்ற உத்தரவுகளுக்குப் பிறகும் பிரச்சினை தீராமல் தொடர்கதையாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இரு நூற்றாண்டுகளாக இருந்து வரும் காவிரி நதிநீர்ப் பிரச்சினை அன்று முதல் இன்று வரை...
ஆங்கிலேயர் காலத்தில் துவங்கிய பிரச்சினை
ஆங்கிலேயர் ஆட்சி காலமான 1870-ல் மைசூர் அரசுக்கும் சென்னை மாகாண அரசுக்கும் இடையே காவிரி நீரைப் பகிர்ந்துகொள்வதில் சிக்கல் எழுந்தது. மைசூர் அரசு, பிரிட்டிஷ் - இந்திய அரசிடம் முறையிட்டதன் பேரில் பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு 1892-ல் முதன்முதலாக ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆறு விதிகளைக் கொண்டிருந்த அந்த ஒப்பந்தத்தின்படி மைசூர் அரசு காவிரியில் புதிதாக அணை ஒன்றைக் கட்ட விரும்பினால் அது குறித்த முழு விவரங்களையும் சென்னை மாகாணத்துக்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும் என்பது அதன் முக்கிய விதியாகும்.
கண்ணம்பாடி அணை விவகாரம்
1910-ல் மைசூர் அரசு கண்ணம்பாடி என்னும்
இடத்தில் 41.5 டி.எம்.சி. நீரைத் தேக்கும் கொள்ளளவுடன் அணை ஒன்றைக்
கட்டுவதற்குத் திட்டமிட்டு அனுமதி கேட்டபோது, சென்னை மாகாண அரசு அதற்கு
எதிர்ப்பு தெரிவித்தது. இதனால், மைசூர் அரசு மத்திய அரசிடம் பிரச்சினையைக்
கொண்டு சென்றது. மத்திய அரசு, கண்ணம்பாடி அணையின் கொள்ளளவு 11
டி.எம்.சி.க்கு மேல் போகக்கூடாது என்ற நிபந்தனையோடு அணை கட்ட அனுமதி
அளித்தது. அதற்கு ஒப்புக்கொண்ட மைசூர் அரசு, தான் திட்டமிட்ட 41.5
டி.எம்.சி. அளவுக்கே அணையைக் கட்ட ஆரம்பித்தது. இதனால் மீண்டும்
பிரச்சினைகள் எழுந்தன.
மைசூர் அரசும் சென்னை மாகாண அரசும் முரண்பட்ட நிலையை எடுத்த காரணத்தால் அன்றைய பிரிட்டிஷ் அரசு 1892-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் கிரிஃபின் என்பவரை காவிரி நீர்ப்பங்கீடு நடுவராக நியமித்து உத்தரவிட்டது. அவர் இரு அரசுகளிடமும் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, மே 22, 1914 அன்று தீர்ப்பு வழங்கினார். சென்னை மாகாணத்தின் தேவைகள் போக, மீதம் உள்ள நீரை மைசூர் அரசு பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் சென்னை மாகாணத்தின் அனுமதி இன்றி விவசாய நிலங்களை மைசூர் அரசு விரிவாக்கம் செய்யக்கூடாது என்பது இத்தீர்ப்பின் முக்கிய சாராம்சமாகும்.
1924- ஆம் ஆண்டு காவிரி ஒப்பந்தம்
இதனையடுத்து அணை கட்டும் பிரச்சினையை மைசூர் முதலில் கிளப்பியது. இதற்கு இங்கிலாந்தில் தீர்வு காணப்பட்டது. அந்நாட்டில் உள்ள ‘மினிஸ்ட்ரி ஆஃப் இந்தியன் எம்பையர்ஸ்’ என்ற துறையின் முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது இரு மாநிலத்திற்கும் பலனளிக்கும் விதத்தில் ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதுதான் கிருஷ்ணராஜ சாகர் அணையை மைசூர் மாகாணம் (கர்நாடகம்) கட்டிக் கொள்ளும். அதற்கு இணையாக மேட்டூர் அணையை சென்னை மாகாணம் கட்டிக் கொள்ளும் என்ற தீர்ப்பு. அப்படித்தான் 1924-ஆம் ஆண்டு காவிரி ஒப்பந்தம் உருவானது. இதன்படி மைசூர் மாகாணம் புதிதாக 1.10 லட்சம் ஏக்கர் நிலம் வரை பாசன வசதிகளை பெருக்கிக் கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டது.
இதன்படி மைசூர் அரசு, கிருஷ்ணராஜ சாகர்
அணையை 1932-ல் கட்டி முடித்தது. இந்த அணையின் உயரம் 125 அடியாகும்.
இதனையடுத்து சென்னை மாகாண அரசு ஸ்டேன்லி நீர்த்தேக்கம் எனப்படும் மேட்டூர்
அணையை 1934-ல் கட்டி முடித்தது. இதன் உயரம் 120 அடியாகும்.
சுதந்திரத்திற்குப் பின்
சுதந்திரத்திற்குப் பின்னும் 1924-ஆம் ஆண்டு ஒப்பந்தம் அமலில் இருந்தது. ஆனால், காவிரி குறித்த பிரச்சினையை 1959-ல் மீண்டும் கர்நாடகா கிளப்பியது. குறிப்பாக ‘கிருஷ்ணராஜ சாகர் அணையைத் தொடர்ந்து ஹேமாவதி, கபினி அணைகள் கட்ட வேண்டும், 1924-ஆம் ஆண்டு ஒப்பந்தம் சுதந்திரத்திற்கு முன்பு போடப்பட்ட ஒப்பந்தம். அது எங்களை கட்டுப்படுத்தாது’ என்றது. இதனை தமிழ்நாடு கடுமையாக எதிர்த்தது.
சுதந்திரத்திற்குப் பின்
சுதந்திரத்திற்குப் பின்னும் 1924-ஆம் ஆண்டு ஒப்பந்தம் அமலில் இருந்தது. ஆனால், காவிரி குறித்த பிரச்சினையை 1959-ல் மீண்டும் கர்நாடகா கிளப்பியது. குறிப்பாக ‘கிருஷ்ணராஜ சாகர் அணையைத் தொடர்ந்து ஹேமாவதி, கபினி அணைகள் கட்ட வேண்டும், 1924-ஆம் ஆண்டு ஒப்பந்தம் சுதந்திரத்திற்கு முன்பு போடப்பட்ட ஒப்பந்தம். அது எங்களை கட்டுப்படுத்தாது’ என்றது. இதனை தமிழ்நாடு கடுமையாக எதிர்த்தது.
இதைத் தீர்க்க அப்போதே ஐந்து முறை இரு மாநிலங்களுக்கு இடையிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், எந்தத் தீர்வும் கிட்டவில்லை. இதனால் 1971-இல் தமிழக அரசு முக்கிய கோரிக்கை ஒன்றை மத்திய அரசிடம் வைத்தது. காவிரி நதிநீர்ப் பங்கீடு பற்றி தீர்ப்பு வழங்க ஒரு நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்றது.
தமிழகத்தின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்காமல் இரு அரசுகளையும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தச் சொன்னது. இதில் நான்கு வருடங்கள் உருண்டோடி விட, கர்நாடகம் ஓர் புது நாடகத்தை அரங்கேற்றியது. அதன்படி ‘காவிரி நதி நீர் ஒப்பந்தம் 1924-இல் போடப்பட்டது. 50 ஆண்டுகள் முடிந்து விட்டதால், அந்த ஒப்பந்தம் காலாவதியாகி விட்டது. இனி அந்த ஒப்பந்தம் மூலம் காவிரி நீரை தமிழகத்துடன் பகிர்ந்துகொள்ள மாட்டோம் என்று அறிவித்தது. இச்சிக்கலைத் தீர்க்க, ‘உண்மை கண்டறியும் குழு’ (Cauvery Fact Finding Committee: CFFC) அமைக்கப்பட்டது. இரு மாநில முதல்வர்களும் சந்தித்துப் பேசிக் கொண்டார்கள். இதிலும் தீர்வு எட்டப்படவில்லை.
காவிரி நடுவர் மன்றம்
இப்படியொரு சூழ்நிலையில், 1990 வாக்கில் முதல்வர்களின் பேச்சில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஆகவே, நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று கூறி உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அதன்படி வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது 1990, ஜூன் 2-ம் தேதி அன்று, 3 உறுப்பினர்களைக் கொண்ட ‘காவிரி நடுவர் மன்றம்’ அமைக்கப்பட்டது.
இடைக்காலத் தீர்ப்பு
காவிரி நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பு ஒன்றை 1991, ஜூன் 25-ஆம் தேதி வழங்கியது. அதன்படி இறுதித் தீர்ப்பு வரும் வரை, தமிழகத்திற்கு 205 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும் என்று கர்நாடக மாநிலத்திற்கு உத்தரவிட்டது. ஆண்டு முழுவதும் எந்தெந்த மாதங்களில் எத்தனை டி.எம்.சி. தண்ணீர் கொடுக்க வேண்டும் என்றும் வரையறுத்தது. அதுமட்டுமின்றி கர்நாடகத்தில் இருக்கின்ற 11.2 லட்சம் நீர்ப்பாசன நிலங்களுக்கு மேல் விஸ்தரிக்கக் கூடாது என்றும் உத்தரவில் குறிப்பிட்டிருந்தது. சில போராட்டங்களுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு, டிசம்பர் 11, 1991-அன்று மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. இதற்கும் கர்நாடக அரசு இணங்காமல் போனது.
1995-இல் நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பை நிறைவேற்ற ஒரு தனி ஆணையம் வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்தது. ஐ.கே.குஜ்ரால் பிரதமராக இருந்தபோது இதன் அடிப்படையில் காவிரி நதி நீர் ஆணையம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதற்கு தலைவராக பிரதமரும், காவிரி நதிநீரில் பங்கு பெறும் கர்நாடகம், தமிழகம், கேரளம், புதுச்சேரி உள்ளிட்ட நான்கு மாநில முதல்வர்கள் உறுப்பினர்களாகவும் இருக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.
குஜ்ரால் வரைவுத் திட்டம்
இந்த ஆணையம் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்காக, ‘குஜ்ரால் வரைவுத் திட்டம்’ ஒன்று உருவாக்கப்பட்டது. அதில் எந்த மாநிலமாவது காவிரி நதிநீர் ஆணைய உத்தரவை மதிக்கத் தவறினால், அந்த மாநிலத்தின் அணைக்கட்டுகளை, அந்த உத்தரவை நிறைவேற்றுவதற்காக காவிரி நதிநீர் ஆணையம் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளலாம் என்று ஒரு அதிகாரமிக்க ஷரத்து ஒன்று இருந்தது. இது மாநில சுயாட்சிக்கு எதிரானது என்று எதிர்ப்பு கிளம்பியதால் இந்த ஷரத்து நீக்கப்பட்டது. பிரதமராக வாஜ்பாய் இருந்த போது காவிரி நதி நீர் ஆணையத்தின் வரைவுத் திட்டம் வெளியிடப்பட்டது. தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களும் காவிரி நீருக்காக உரிமை கொண்டாடின.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு
இந்நிலையில் காவிரி நடுவர் மன்றத்தின்
இறுதித் தீர்ப்பு பிப்ரவரி 5, 2007 அன்று வழங்கப்பட்டது. பல்வேறு
சாட்சிகளிடம் விசாரணை நடத்திய பின்னர், ஆயிரத்துக்கும் அதிகமான பக்கங்கள்
உடைய, ஐந்து தொகுப்புகள் கொண்டதாக இத்தீர்ப்பு அமைந்தது.
நீதிபதி என்.பி. சிங் தலைமையிலான நடுவர் மன்றத்தின் தீர்ப்பின்படி காவிரியில் கிடைக்கும் மொத்த நீர் 740 டி.எம்.சி. என்றும், அதில் 419 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்திற்கும், கேரளாவுக்கு 30 டி.எம்.சி.யும் புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி.யும் வழங்கப்பட வேண்டும் என்றும் கர்நாடகாவிற்கு உத்தரவிடப்பட்டது. இதில் கர்நாடக எல்லையில் உள்ள பில்லிக்குண்டு அளவீட்டுப்படி 192 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டும். மீதியுள்ள 227 டி.எம்.சி. பில்லிக்குண்டுவிலிருந்து- காவிரி டெல்டா வரை கிடைக்கும் நீரின் அளவாக கணக்கில் கொள்ளப்பட்டது.
உச்சநீதிமன்றம் சுழற்றிய சாட்டை
இறுதித் தீர்ப்பு வந்த பிறகும் கர்நாடகம் மசியவில்லை. உச்சநீதிமன்ற உத்தரவுகளையும் நிறைவேற்றாமல் தமிழகத்திற்கு தரவேண்டிய நீரை விட மறுத்தது. இதனால், மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு, காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என வாதிட்டது. இதுகுறித்து உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் மெத்தனப் போக்கை கடுமையாக சாடியது மட்டுமின்றி, தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடுமாறும் உத்தரவிட்டது. இதனையடுத்து, இம்மாத இறுதிக்குள் மத்திய அரசிதழில் காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதித் தீர்ப்பு வெளியிடப்படும்’ என்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் துருவ் சிங் அறிவித்துள்ளார். இதனுடன் பிரச்சினை முடிந்துவிடுமா என்ன?
தொகுப்பு: மோ. கணேசன்
காவிரியின் பயணம்...
தலைக்காவிரியில் (கடல் மட்டத்திலிருந்து 4,400 அடி உயரத்தில்) உற்பத்தியாகும் காவிரி ஆறு, கர்நாடகத்தில் குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, சாம்ராஜ் நகர் மாவட்டங்கள் வழியாகவும் தமிழ்நாட்டில் தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் வழியாகவும் தவழ்ந்து வந்து பூம்புகார் என்னும் இடத்தில் வங்கக் கடலில் கலக்கிறது.
பொன்னி ஆறு என்றும் அழைக்கப்படுகின்ற காவிரி ஆறுக்கு ஹேமாவதி, சிம்சா, ஆர்க்காவதி, கபினி, ஹாரங்கி, லட்சுமண தீர்த்தம், சொர்ணவதி ஆகியவை கர்நாடக பகுதியிலும் பவானி, நொய்யல், அமராவதி ஆகியன தமிழக பகுதியிலும் இதன் துணை ஆறுகள் பாய்கின்றன.
கர்நாடகாவில் காவிரியின் நீளம் 320 கி.மீ., தமிழ்நாட்டில் இதன் நீளம் 416 கி.மீ., கர்நாடக-தமிழக எல்லையில் இதன் நீளம் 64 கி.மீ. ஆக காவிரி ஆற்றின் ஒட்டுமொத்த நீளம் 800 கி.மீட்டர்.
காவிரி ஆற்றின் மீது கர்நாடக அரசு 12 தடுப்பணைகள் கட்டியுள்ளன. அதில் மிகப்பெரியது கிருஷ்ணராஜ சாகர் அணையாகும். தமிழ்நாட்டில் மேட்டூர் அணை, கல்லணை மற்றும் மேலணை ஆகியன காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள அணைகளாகும். இதில் மேட்டூர் அணையே தமிழகத்தின் மிகப்பெரிய அணையாகும்.
நதிநீர்ப் பிரச்சினைகள் சட்டம்
இந்தியாவில் பதினான்கு மகாநதிகள், 44 நடுத்தர ஆறுகள் இருக்கின்றன. இதில் அனைத்து மகாநதிகளும், ஒன்பது நடுத்தர ஆறுகளும் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு இடையே ஓடுகின்றன.
மாநிலங்களுக்கு இடையே ஓடுகிற நதிகளால் பிரச்சினைகள் வரும் என்பதை உணர்ந்து, நமது அரசியலமைப்புச் சட்டத்தில் இதற்கெனப் பிரிவு 262 சேர்க்கப்பட்டுள்ளது. நதிநீர்ப் பங்கீடு பற்றிய சிக்கல் எழுந்தால் அதை நாடாளுமன்றம் தலையிட்டுத் தீர்த்துவைக்க வேண்டும் என அந்தப் பிரிவு கூறுகிறது. அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 262-ன்படி, ஆகஸ்ட் 28,1956-ல் இயற்றப்பட்டதுதான் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர்ப் பிரச்சினைகள் சட்டம் (Inter – State River Water Disputes Act).
0 comments:
Post a Comment