14 புதிய மாற்றங்களுடன் ஏ-ஸ்டார் லிமிடெட் எடிசன்
மாருதி சுசூகி நிறுவனம், சிறிய கார் பிரிவில்,
ஏ-ஸ்டார் மாடல் காரை விற்பனை செய்து வருகிறது. தற்போது, இந்த காரின்,
லிமிடெட் எடிசன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே விற்பனையில் உள்ள, ஏ
-ஸ்டார் காரில், 14 புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு, புது காராக விற்பனைக்கு
வந்துள்ளது. ஏற்கனவே விற்பனையில் உள்ள ஏ-ஸ்டார் காரை விட, லிமிடெட் எடிசன்
காரின் விலை ரூ.14,990 அதிகம். விஎக்ஸ்ஐ (மேனுவல் டிரான்ஸ்மிஷன்) மற்றும்
விஎக்ஸ்ஐ ஏடி (ஆட்டோமேடிக் டிரான்ஸ்டிமிஷன்) ஆகிய வேரியன்ட்களில் தான்,
லிமிடெட் எடிசன் கார் கிடைக்கும். இந்த இரண்டு வேரியன்ட் கார்களின் டில்லி
எக்ஸ்ஷோரூம் விலை, ரூ.4.10 லட்சம், ரூ.4.61 லட்சம் என்ற அளவில் உள்ளது.
இந்த காரில், 1 லிட்டர், 3 சிலிண்டர் கே - சீரிஸ் பெட்ரோல் இன்ஜின்
பொருத்தப்பட்டுள்ளது. லிமிடெட் எடிசன் காருக்கு, "ஏ-ஸ்டார் அக்டிவ்' என்று
பெயரிடப்பட்டுள்ளது. இந்த கார், ஒரு லிட்டருக்கு, 19 கி.மீ., மைலேஜ் தரும்
என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment